/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வாகன ஓட்டிகளை சிந்திக்க வைத்த '160-165' என்ற விழிப்புணர்வு பலகை வாகன ஓட்டிகளை சிந்திக்க வைத்த '160-165' என்ற விழிப்புணர்வு பலகை
வாகன ஓட்டிகளை சிந்திக்க வைத்த '160-165' என்ற விழிப்புணர்வு பலகை
வாகன ஓட்டிகளை சிந்திக்க வைத்த '160-165' என்ற விழிப்புணர்வு பலகை
வாகன ஓட்டிகளை சிந்திக்க வைத்த '160-165' என்ற விழிப்புணர்வு பலகை
ADDED : செப் 01, 2025 02:19 AM
கரூர்;கரூரில், டூவீலர்களில் செல்வோர், 'ஹெல்மெட்' அணிவதை வலியுறுத்தி போலீசார் சார்பில், 160-165 என்ற எண் கொண்ட விழிப்புணர்வு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகரை சுற்றி மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு சாலை செல்கிறது. அதில், நாள்தோறும் விபத்துக்கள் நடந்து வருகின்றன.
டூவீலர்களில் செல்வோர், 'ஹெல்மெட்' அணியாமல் செல்லும்போது விபத்தில் சிக்கி, தலையில் படுகாயமடைந்து உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இதனால், கரூர் எஸ்.பி.,யாக கடந்த மாதம் பொறுப்பேற்ற ஜோஸ் தங்கையா, டூவீலர்களில் செல்கிறவர்கள், 'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கரூர் மாநகரில் பல இடங்களில், 160-165 என்ற எண் உடைய விழிப்புணர்வு போர்டுகள், போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்டுகள், பொதுமக் களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து, கரூர் எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு, 'ஹெல்மெட்' அணியாமல், டூவீலரில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 160 ஆக உள்ளது. நடப்பாண்டு, கடந்த ஆக., மாதம் வரை, 'ஹெல்மெட்' அணியாமல் டூவீலரில் சென்று விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 165 ஆக அதிகரித்துள்ளது.
இதனால், பொதுமக்களிடம், 'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, 160-165 என, போலீசார் சார்பில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில், டூவீலர்களில் செல்கிறவர்கள் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.