/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தார்ச்சாலையின்றி வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் 12 ஆண்டாக தொடரும் அவலம் தார்ச்சாலையின்றி வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் 12 ஆண்டாக தொடரும் அவலம்
தார்ச்சாலையின்றி வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் 12 ஆண்டாக தொடரும் அவலம்
தார்ச்சாலையின்றி வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் 12 ஆண்டாக தொடரும் அவலம்
தார்ச்சாலையின்றி வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் 12 ஆண்டாக தொடரும் அவலம்
ADDED : செப் 24, 2025 02:09 AM
கரூர் :கரூர் அருகே, வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு தார்ச்சாலை வசதி இல்லாததால், புகார் கொடுக்க வரும் பொதுமக்கள், பணிக்கு செல்லும் போலீசார், அவதிப்பட்டு வருகின்றனர்.
கரூர் டவுன் போலீஸ் சரகத்தில், கரூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், வாங்கல், வெள்ளியணை, தான்தோன்றிமலை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், கரூர் டவுன், பசுபதிபாளையம், வாங்கல், வெள்ளியணை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ளது.
கடந்த, 2006-11ல், தி.மு.க., ஆட்சியின் போது, வெங்கமேட்டுக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணி, அருகம்பாளையம் பகுதியில் துவங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியின் போது கடந்த, 2013 செப்.,ல் திறக்கப்பட்டது. பழைய சேலம் சாலையில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, வெங்கமேடு சுடுகாடு மற்றும் டாஸ்மாக் கடைக்கு அருகில், புதிய வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிய போலீஸ் ஸ்டேஷனை சுற்றி, அதிகளவில் விவசாய நிலங்கள் உள்ளன.
சேலம் பழைய சாலை, வெங்கமேட்டில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தார்ச்சாலை வசதி உள்ளது. ஆனால், அருகம்பாளையம் பகுதியில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் சாலை, போக்குவரத்துக்குரிய தார்ச்சாலை வசதிகள் இல்லை. மண் சாலை மட்டுமே உள்ளது. இதனால், மழை பெய்யும்போது, வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் அருகம்பாளையம் பிரிவு சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், சேறும், சகதியும் நிறைந்த சாலையில், பொதுமக்களும், போலீசாரும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.
சில நாட்களாக, மின் விளக்குகளும் சரிவர எரியாததால், இரவு நேரத்தில் செல்ல முடியாமல், பொதுமக்கள் புகார் கொடுக்காமல் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷனை சுற்றி, விவசாய நிலங்கள் இருப்பதால், இரவு நேரத்தில் பணியில் உள்ள போலீசார், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் மற்றும் கொசு தொல்லை
யால் அவதிப்படுகின்றனர்.
எனவே, புதிதாக திறக்கப்பட்ட வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு பொது மக்கள் மற்றும் போலீசார் சென்று வரும் வகையில், அருகம்பாளையம் பிரிவு மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி, ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் உள்ள, தெரு விளக்குகள் நாள்தோறும் எரியும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.