/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அ.தி.மு.க., பிரசார வாகனம் மாஜி அமைச்சர் துவக்கி வைப்பு அ.தி.மு.க., பிரசார வாகனம் மாஜி அமைச்சர் துவக்கி வைப்பு
அ.தி.மு.க., பிரசார வாகனம் மாஜி அமைச்சர் துவக்கி வைப்பு
அ.தி.மு.க., பிரசார வாகனம் மாஜி அமைச்சர் துவக்கி வைப்பு
அ.தி.மு.க., பிரசார வாகனம் மாஜி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : செப் 24, 2025 02:09 AM
கரூர் ;கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பிரசார வாகனத்தை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என, சட்டசபை தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில் நாளை, நாளை மறுநாள், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிரசாரம் செய்ய உள்ளார்.
இதையடுத்து, கரூர் மாவட்டம் முழுவதும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வருகை குறித்து பிரசாரம் செய்ய, வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை, நேற்று இரவு கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்ட ஜெ., பேரவை இணைச்செயலாளர் பரமசிவம் உள்பட பலர் உடனிருந்தனர்.