/உள்ளூர் செய்திகள்/கரூர்/சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 03, 2024 06:56 AM
கரூர் : நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கரூர் தொழிற்பேட்டையில், 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.அங்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழகம், தமிழ்நாடு டாஸ்மாக் குடோன் உள்ளன. அதில், நுகர்பொருள் வணிக கழகம், டாஸ்மாக் ஆகியவற்றுக்கு பொருட்களை ஏற்றி செல்ல வந்து செல்கின்றனர். அந்த குடோனில் வாகன நிறுத்தம் இடம் இல்லாதால், கரூர்- திருச்சி பழைய நெடுஞ்சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சில நேரங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. இந்த சாலையில் ரோந்து வரும் போலீசாரும், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துவதில்லை. இந்த சாலை வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் உட்பட வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.சம்பந்தப்பட்ட துறையினர் நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.