/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.92 கோடிக்கு காய்கறிகள் விற்பனை கரூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.92 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
கரூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.92 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
கரூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.92 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
கரூர் உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.92 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
ADDED : செப் 11, 2025 01:24 AM
கரூர் :கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. கரூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள், பழங்களை கொண்டு-வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
வழக்க-மாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வருகின்றனர்.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோவில் திருவிழா, பண்டிகை வந்ததால் காய்கறி விற்பனை கூடுலாக நடந்தது.
சந்தையில், 3,164 விவசாயிகள் மொத்தமாக, 420.57 டன் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம், 1 கோடியே, 92 லட்சத்து, 38 ஆயிரத்து, 660 ரூபாய்-க்கு காய்கறி விற்பனையானது. 93 ஆயிரத்து, 457 பேர் உழவர் சந்தைகளுக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.