/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 11, 2025 01:23 AM
கரூர் :கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், புகழூர் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். தலைவர் அன்புமணி வெளிட்ட விடியல் எங்கே என்ற புத்தகத்தை, முக்கிய பிரமுகர்களுக்கு வழங்குதல், கரூர் மாவட்டத்தில் அன்புமணியின் எழுச்சி நடை பயணத்தை சிறப்பாக நடத்துதல், கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத மணல் கடத்தலை காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட தலைவர் பிரபாகரன், அமைப்பு செயலாளர் குணசீலன், மாநகர செயலாளர் ராக்கி முருகேசன், இளைஞர் அணி தலைவர் குமரேசன்ல மாணவர் அணி செயலாளர் வினோத், வன்னியர் சங்க செயலாளர் பசுபதி உள்பட, பலர் பங்கேற்றனர்.