/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கள்ளப்பள்ளி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல் கள்ளப்பள்ளி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்
கள்ளப்பள்ளி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்
கள்ளப்பள்ளி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்
கள்ளப்பள்ளி சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வலியுறுத்தல்
ADDED : மே 12, 2025 03:25 AM
கரூர்: கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த, கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதியில், கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கள்ளப்-பள்ளி, சிந்தலவாடி, புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, லாலாப்-பேட்டை, பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, மகாதா-னபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெறு-கின்றனர். தினமும், 50 பேருக்கு மேற்பட்டவர்கள் வந்து செல்-கின்றனர்.
குழந்தைகள் மருத்துவம், கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை மற்றும் இதர பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகளவில் மக்கள் வந்து செல்வதால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் வசதி தேவைப்படுகிறது. எனவே, தரம் உயர்த்தி கூடுதல் வசதி செய்து தர வேண்டும். என, மக்கள் வலியுறுத்தி வருகின்-றனர்.


