/உள்ளூர் செய்திகள்/கரூர்/ லாலாப்பேட்டையில் பொக்லைன் வாகனங்கள் வேலை நிறுத்தம் லாலாப்பேட்டையில் பொக்லைன் வாகனங்கள் வேலை நிறுத்தம்
லாலாப்பேட்டையில் பொக்லைன் வாகனங்கள் வேலை நிறுத்தம்
லாலாப்பேட்டையில் பொக்லைன் வாகனங்கள் வேலை நிறுத்தம்
லாலாப்பேட்டையில் பொக்லைன் வாகனங்கள் வேலை நிறுத்தம்
ADDED : மே 12, 2025 03:25 AM
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில், பொக்லைன் வாகனங்கள் இயக்கப்ப-டாமல், நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை அருகில், நேற்று காலை முதல் எர்த் மூவர்ஸ் சங்கம் சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. டீசல் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, இன்சூரன்ஸ் உயர்வு காரணமாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த  போராட்டம் நேற்று நடந்தது. இரண்டு மணி நேரத்திற்கு, 3,500 ரூபாய், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, 1,400 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்-தைப்பேட்டை பகுதியில், பொக்லைன் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டது.


