/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கோவில் விழாவில் தகராறு இரண்டு வாலிபர்கள் கைது கோவில் விழாவில் தகராறு இரண்டு வாலிபர்கள் கைது
கோவில் விழாவில் தகராறு இரண்டு வாலிபர்கள் கைது
கோவில் விழாவில் தகராறு இரண்டு வாலிபர்கள் கைது
கோவில் விழாவில் தகராறு இரண்டு வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 04, 2025 01:11 AM
குளித்தலை, கோவில் விழாவில் தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அடுத்த, கள்ளபள்ளி பஞ்சாயத்தில் உள்ள, லாலாபேட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கொடிக்கால் தெருவை சேர்ந்த கார்த்திக், 23, மணி, 27, ஆகியோர் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தையில் பேசிக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இருவரையும் போலீசார் எச்சரிக்கை செய்தும் கண்டுகொள்ளாததால், இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.