/உள்ளூர் செய்திகள்/கரூர்/பஸ் கண்டக்டரை தாக்கிய வழக்கில் இருவர் கைதுபஸ் கண்டக்டரை தாக்கிய வழக்கில் இருவர் கைது
பஸ் கண்டக்டரை தாக்கிய வழக்கில் இருவர் கைது
பஸ் கண்டக்டரை தாக்கிய வழக்கில் இருவர் கைது
பஸ் கண்டக்டரை தாக்கிய வழக்கில் இருவர் கைது
ADDED : ஜூன் 09, 2024 03:58 AM
குளித்தலை: அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார், 48. இவர் அரசு டவுன் பஸ் கண்டக்டராக பணிபுரிகிறார். கடந்த, 2 மதியம், 3:00 மணியளவில் குளித்தலையில் இருந்து பரளி, கருங்களாப்பள்ளி, மேட்டுமருதுார் வழியாக பெட்டவாய்த்தலை செல்லும் அரசு டவுன் பஸ், கருங்கலாப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது, கருங்களாப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், 31, ரத்தினம் பிள்ளை புதுார் நேரு காலனி மணிகண்டன், 35, ஆகியோர் குடிபோதையில் பஸ்சை மறித்து, தகாத வார்த்தையால் திட்டி படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் அசோக்குமாரை கீழே தள்ளி, கையால் அடித்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.