லாரி மோதி விபத்து; இளைஞர் படுகாயம்
லாரி மோதி விபத்து; இளைஞர் படுகாயம்
லாரி மோதி விபத்து; இளைஞர் படுகாயம்
ADDED : ஜூலை 10, 2024 06:56 AM
அரவக்குறிச்சி: தென்னிலை அருகே, லாரி மோதிய விபத்தில் நடந்து சென்ற இளைஞர் படுகாயம் அடைந்தார்.அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே இடையாறு கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் வீராச்சாமி மகன் ராகுல், 20.
இவர், நேற்று கரூர்-கோவை சாலையில் அதிகாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் கீரனுார் வி.டி.கே காலனி தெற்கு ரத தெருவை சேர்ந்த சேகர், 60, என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, ராகுல் மீது மோதியது. இந்த விபத்தில் ராகுல் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக ராகுலின் தாய் சுதா, அளித்த புகார்படி, தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.