/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் தபால் நிலையம் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்கரூர் தபால் நிலையம் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் தபால் நிலையம் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் தபால் நிலையம் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் தபால் நிலையம் முன் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 10, 2024 06:56 AM
கரூர்: கரூர் அட்வகேட் பார் கவுன்சில் சார்பில், மாவட்ட செயலாளர் நகுல்சாமி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், முப்பெரும் சட்டங்களின் பெயர்களை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழியில் மாற்றியுள்ளதை கண்டித்தும், சட்டங்களை அமல்படுத்தும் முடிவுகளை, திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர். பிறகு, வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.* மத்திய அரசு கொண்டு வந்த, புதிய மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில். நீதிமன்றத்தில் இருந்து வழக்கறிஞர்கள் பேரணியாக சென்று, தாலுகா அலுவலகம் எதிரே உள்ள தபால் நிலையம் முன், மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வைத்தார். மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர் சங்க செயலாளர் நாகராஜன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கலைச்செல்வன், மனோகரன், வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் சரவணன், மருத முத்து, ஜாபர்சேட் ஆகியோர் பேசினர். 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் சங்க பொருளாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.