/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பாப்புலர் முதலியார் வாய்க்கால் துார்வாரும் பணி மும்முரம் பாப்புலர் முதலியார் வாய்க்கால் துார்வாரும் பணி மும்முரம்
பாப்புலர் முதலியார் வாய்க்கால் துார்வாரும் பணி மும்முரம்
பாப்புலர் முதலியார் வாய்க்கால் துார்வாரும் பணி மும்முரம்
பாப்புலர் முதலியார் வாய்க்கால் துார்வாரும் பணி மும்முரம்
ADDED : ஜூன் 15, 2025 01:49 AM
கரூர், கரூர் மாவட்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி பகுதியில், புகழூர் ராஜவாய்க்காலில் இருந்து பிரிந்து செம்படாபாளையம், தளவாப்பாளையம், மேட்டுப்பாளையம், கடம்பங்குறிச்சி என, 10 கி.மீ., தொலைவில் வாங்கல் வாய்க்காலுடன் கலக்கிறது பாப்புலர் முதலியார் வாய்க்கால். இந்த வாய்க்கால் வாயிலாக, 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்காலை பயன்படுத்தி விவசாயிகள் கோரை, வாழை, நெல் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர்.
காவிரியாற்றில் நீர் திறக்கும்போது, வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டே இருக்கும். எனவே வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, நீர்வள ஆதாரத் துறையின் பாப்புலர் முதலியார் வாய்க்காலில் துார் வாரும் பணியை தொடங்கினர்.
இதை கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். 7 லட்சம் ரூபாய் மதிப்பில், பாப்புலர் முதலியார் வாய்க்காலில் உள்ள நெடுகை 2 கி.மீ., முதல் 9 கி.மீ., வரை படர்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்தி துார்வாரும் பணி நடக்கிறது.