/உள்ளூர் செய்திகள்/கரூர்/இருட்டில் தவிக்கும் ஆர்.டி.ஓ.,அலுவலகம்இருட்டில் தவிக்கும் ஆர்.டி.ஓ.,அலுவலகம்
இருட்டில் தவிக்கும் ஆர்.டி.ஓ.,அலுவலகம்
இருட்டில் தவிக்கும் ஆர்.டி.ஓ.,அலுவலகம்
இருட்டில் தவிக்கும் ஆர்.டி.ஓ.,அலுவலகம்
ADDED : ஜன 13, 2024 04:17 AM
கரூர்: கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் கடந்த, ஒரு மாத காலமாக மின் கம்பங்களில் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது.
இதனால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்ட, பழைய கலெக்டர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் வணிக வரி அலுவலகம், ஆபீசர்ஸ் கிளப், ஆர்.டி. ஒ., இல்லம் ஆகியவை உள்ளது.கடந்த ஒரு மாத காலமாக ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள, மின் கம்பங்களில் உள்ள,விளக்குகள் எரிவது இல்லை. சில மின் கம்பங்கள் உடைந்த நிலையிலும், சாய்ந்தும் உள்ளது. அதை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதியில் அனுமதி இல்லாமல், மணல் அள்ளி செல்லும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அவ்வப்போது நிறுத்தி வைக்கப்படு கிறது. அதை தவிர, ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர் களும் இரவு நேரத்தில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். அதில், கடந்த சில நாட்களாக உதிரி பாகங் களை, மர்ம மனிதர்கள் திருடி செல்லும் சம் பவம் தொடர்கதையாக உள்ளது. இதற்கு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள விளக்குகள் எரியாததே காரணமாக உள்ளது.மேலும், போலீசார் மூலம் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு வருகிறவர்கள், அமைதி பேச்சு வார்த்தைக்கு வரும் பொதுமக்கள் விளக்கு எரியாததால் அலுவலக வளாகத்தில், இருட் டில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.கரூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.