/உள்ளூர் செய்திகள்/கரூர்/'கரூரில் மழைநீர் வடிகால்களை முழுமையாக துார்வார வேண்டும்''கரூரில் மழைநீர் வடிகால்களை முழுமையாக துார்வார வேண்டும்'
'கரூரில் மழைநீர் வடிகால்களை முழுமையாக துார்வார வேண்டும்'
'கரூரில் மழைநீர் வடிகால்களை முழுமையாக துார்வார வேண்டும்'
'கரூரில் மழைநீர் வடிகால்களை முழுமையாக துார்வார வேண்டும்'
ADDED : ஜூன் 02, 2024 07:22 AM
கரூர் : ''மாவட்டத்தில் மழைநீர் வடிகால்களை முழுமையாக துார்வார வேண்டும்,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்காத வகையிலும், அதிகப்படியாக தேங்கும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். மழைநீரானது சாக்கடையுடன் கலந்து தேங்குவதால், இதர தொற்று நோய்கள் பரவாமல் தடுத்திடும் வகையில் அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என பிரித்து, பெரிய மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் திடக்கழிவுகளை பொக்லைன், ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.
அகற்றப்பட்ட வடிகால் படிவுகளை, 2 நாட்களுக்குள் அப்புறப்படுத்தி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். வடிகால் படிவுகளை அகற்றும்போது வடிகால்கள் மற்றும் தெருக்களில் சேகரமாகியுள்ள திடக்கழிவுகள், கட்டட இடிபாடுகள் மற்றும் செடி, கொடி, புதர்களை முழுமையாக அகற்றிட வேண்டும்.
இவ்வாறு, அவர், பேசினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, பேரிடர் மேலாண்மை தாசில்தர் பிரபு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.