ADDED : ஜூன் 02, 2024 07:22 AM
அரவக்குறிச்சி : வேலாயுதம்பாளையம் அருகே, சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புகழூர் நால்ரோடு பகுதியில் தோட்டக்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன், 61, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த, 500 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.