/உள்ளூர் செய்திகள்/கரூர்/ செங்கோட்டையன் விடுத்த கெடு கழகத்துக்கு கேடு: மாஜி அமைச்சர் காட்டம் செங்கோட்டையன் விடுத்த கெடு கழகத்துக்கு கேடு: மாஜி அமைச்சர் காட்டம்
செங்கோட்டையன் விடுத்த கெடு கழகத்துக்கு கேடு: மாஜி அமைச்சர் காட்டம்
செங்கோட்டையன் விடுத்த கெடு கழகத்துக்கு கேடு: மாஜி அமைச்சர் காட்டம்
செங்கோட்டையன் விடுத்த கெடு கழகத்துக்கு கேடு: மாஜி அமைச்சர் காட்டம்
ADDED : செப் 10, 2025 01:21 AM
கரூர் :''முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான நடவடிக்கையை வரவேற்கிறேன்,'' என, அ.தி.மு.க., அமைப்பு செயலரும், முன்னாள் தொழில் துறை அமைச்சருமான கரூர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆட்சி, கட்சியை காப்பாற்றிய உண்மை தொண்டன் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஆவார். இந்த நிலையில் பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க, குறிப்பாக சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வரும் உள்நோக்கத்துடன் செயல்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான இ.பி.எஸ்., நடவடிக்கையை வரவேற்கிறேன். பல்வேறு சோதனைகளில் இருந்து கட்சியை காப்பாற்றி வரும் இ.பி.எஸ்.,க்கு இடையூறு செய்வது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். பொது செயலருக்கு கெடு விதித்து செங்கோட்டையன் பேசியது கழகத்துக்கு கேடாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.