/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாய்கள் தயாரிக்க கோரை புல் அறுவடை துவக்கம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாய்கள் தயாரிக்க கோரை புல் அறுவடை துவக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாய்கள் தயாரிக்க கோரை புல் அறுவடை துவக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாய்கள் தயாரிக்க கோரை புல் அறுவடை துவக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாய்கள் தயாரிக்க கோரை புல் அறுவடை துவக்கம்
ADDED : செப் 10, 2025 01:21 AM
கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், தீபாவளி பண்டிகைக்காக, பாய்கள் தயாரிக்க கோரை புல் அறுவடை தொடங்கியுள்ளது.
குறைந்த சாகுபடி செலவு, அதிக நாட்களுக்கு அறுவடை, நீண்ட கால வருமானம் உள்ளிட்ட காரணங்களால், கரூர் மாவட்டத்தில் கோரை புல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெரூர், செவிந்திப்பாளையம், ஒத்தக்கடை, என்.புதுார், பஞ்சாமாதேவி, மறவாப்பாளையம், கோயம்பள்ளி, புதுப்பாளையம், வாங்கல், திருமாக்கூடலுார், கடம்பங்குறிச்சி, அரங்கநாதன் பேட்டை உள்ளிட்ட காவிரியாற்று பகுதிகளில், கோரை புல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் பாய்கள், வீட்டு அலங்கார பொருட்கள், கூடை, இருக்கை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து கோரை புல் விவசாயிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் பணப்பயிர்களான நெல், கரும்பு, மஞ்சள், வாழையை அடுத்து கோரை புல் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்த கோரை புல்லை காய வைத்து, உடனடியாக பாய் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விட வேண்டும். இல்லையென்றால், நிறம் மாறி விடும். உடைந்து விழும். இதை கொண்டு பாய் தயாரிக்க முடியாது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும், ஒன்றரை மாதம் உள்ளதால், கோரைப்பாய்க்கு ஆர்டர் நிறைய வந்துள்ளது. 16 இன்ச் கொண்ட கோரை புல் ஒரு கட்டு, 1,500 ரூபாய் வரை விலை போனது. தற்போது, பாய் உற்பத்தியாளர் தரப்பில் இருந்து, 1,200 ரூபாய்தான் விலை கிடைக்கிறது. இவ்வாறு