/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தாளியாம்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம் தாளியாம்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
தாளியாம்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
தாளியாம்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
தாளியாம்பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : ஜூன் 07, 2025 01:23 AM
குளித்தலை, தாளியாம்பட்டியில் விநாயகர், சக்தி ஏழு கன்னிமார், அக்னி பாப்பாத்தி அளவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., தாளியாம்பட்டியில் விநாயகர், சக்தி ஏழு கன்னிமார், அக்னி பாப்பாத்தி, வேட்டைக்கார சுவாமி, அளவாயி அம்மன், மலையாள கருப்பண்ண சுவாமி, முருகன், மாயம் பெருமாள், பெரியக்காள், வீரம்மாள், மதுரை வீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. புனரமைப்பு பணிகள் கோவிலில் நிறைவடைந்ததையடுத்து, கடந்த, 4ல் திம்மாச்சிபுரம் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது.
சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, லட்சார்ச்சனை உள்பட யாக வேள்வி பூஜைகளை செய்தனர். நேற்று காலை, புனித நீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.