/உள்ளூர் செய்திகள்/கரூர்/முட்புதருக்குள் சின்டெக்ஸ் தொட்டி; பொதுமக்கள் அவதிமுட்புதருக்குள் சின்டெக்ஸ் தொட்டி; பொதுமக்கள் அவதி
முட்புதருக்குள் சின்டெக்ஸ் தொட்டி; பொதுமக்கள் அவதி
முட்புதருக்குள் சின்டெக்ஸ் தொட்டி; பொதுமக்கள் அவதி
முட்புதருக்குள் சின்டெக்ஸ் தொட்டி; பொதுமக்கள் அவதி
ADDED : மார் 11, 2025 06:59 AM
கரூர்: கரூர் அருகே, முட்புதருக்குள் சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சி, ராயனுார் பொன் நகரில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் வசதிக்காக, மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் போடப்பட்டது. மேலும், போர்வெல் அமைக்கப்பட்டு, மின் மோட்டாரும் பொருத்தப்பட்டது. இந்நிலையில், மழை காரணமாக, சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி, முட்புதர்கள் முளைத்துள்ளது. போர்வெல் குழாய்களும் சேதம் அடைந்துள்ளதால், நிலத்தடி நீரையும் பொது மக்களால் பயன்படுத்த, முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, கரூர் மாநகராட்சி நிர்வாகம், சேதமடைந்த போர்வெல் குழாய்களை உடனடியாக சரி செய்து, சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி முளைத்துள்ள, முட்புதர்களை அகற்ற வேண்டியது அவசியம்.