/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் வட்டார பகுதிகளில் திடீர் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதிகரூர் வட்டார பகுதிகளில் திடீர் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி
கரூர் வட்டார பகுதிகளில் திடீர் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி
கரூர் வட்டார பகுதிகளில் திடீர் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி
கரூர் வட்டார பகுதிகளில் திடீர் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி
ADDED : மார் 12, 2025 07:57 AM

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மதியம் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பூமத்திய ரேகையையொட்டிய, வடகிழக்கு இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு, சுழற்சி காரணமாக தமிழகத்தில், தென் மாவட்டங்களில், நேற்று மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கரூர் மாவட்டத்திலும் நேற்று அதிகாலை முதல், பல இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. ஆனால், மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இதற்கிடையில் நேற்று மதியம், 12:30 முதல், 1:00 மணி வரை கரூர் நகர், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை, கொளந்தானுார், வெங்கமேடு, புகழூர், வேலாயுதம்பாளையம், க.பரமத்தி, வெள்ளியணை, திருமாநிலையூர், திருகாம்புலியூர், தான்தோன்றிமலை, அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மழை விட்டு விட்டு பெய்தது.
மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் சராசரியாக, 100 டிகிரி வெயில் அடித்து வருகிறது. கோடை காலத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மதியம் பெய்த மழையுடன், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, சுக்காம்பட்டி, லட்சுமணம்பட்டி, பழையஜெயங்கொண்டம், மேட்டு மகாதானபுரம், மகாதானபுரம், லாலாப்பேட்டை, வயலுார், சரவணபுரம், சிவாயம், இரும்பூதிப்பட்டி, பாப்பகாப் பட்டி, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், மேட்டுப்பட்டி, வரகூர் ஆகிய கிராமங்களில் நேற்று மதியம் முதல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மழை பெய்ததால், இப்பகுதியில் குளிர்ச்சி நிலவியது.