/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் முருங்கைக்காய் சீசன் துவக்கம் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் முருங்கைக்காய் சீசன் துவக்கம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் முருங்கைக்காய் சீசன் துவக்கம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் முருங்கைக்காய் சீசன் துவக்கம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் முருங்கைக்காய் சீசன் துவக்கம்
ADDED : மார் 12, 2025 07:56 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் கிராமங்களில், முருங்கைக்காய் சீசன் துவங்கியுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, உடைகுளத்துப்பட்டி, தாராபுரத்தனுார், மேட்டுப்பட்டி, சேங்கல், சின்ன சேங்கல், கருப்பூர், கோரக்குத்தி ஆகிய பகுதிகளில், விவசாயிகள் பரவலாக கிணற்று நீர் பாசன முறையில் செடி முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் முருங்கை செடிகள் வளர்ச்சி கண்டு, பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகிறது. மேலும் விளைந்த முருங்கைக்காய்களை பறித்து, உள்ளூர் வாரச் சந்தைகளில் சில்லரை விற்பனையாக விற்கப்படுகிறது. நேற்று ஒரு முருங்கைக்காய் இரண்டு ரூபாய்க்கு விற்பனையானது. முருங்கைக்காய் சீசன் துவங்கி விட்டதால், விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது.