/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல் மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
மலைக்கோவிலுாரிலிருந்து மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 21, 2025 01:31 AM
அரவக்குறிச்சி :மலைக்கோவிலுாரில் இருந்து, மூலப்பட்டிக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலுாரில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் மூலப்பட்டி கிராமம் உள்ளது.இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மூலப்பட்டி, வடுகநாகம்பள்ளி, குப்பை மேட்டுப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
ஐந்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன், உயர்நிலையில் சேர வேண்டும் என்றால், 6 கி.மீ., துாரம் உள்ள மலைக்கோவிலுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும்.இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காலை, மாலை என பள்ளி நேரத்திற்கு அரசு பஸ்கள் மூலப்பட்டி வரை இயக்கப்பட்டது. இதை மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் கொரோனாவிற்கு பிறகு, 4 ஆண்டுகளாக பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் தினமும் 6 கி.மீ., வரை நடந்து சென்று படிக்கும் அவல நிலை உள்ளது.
மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நலன் கருதி, நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.