/உள்ளூர் செய்திகள்/கரூர்/ டூவீலரில் அதிவேகமாக சென்றவர் விபத்தில் பலி டூவீலரில் அதிவேகமாக சென்றவர் விபத்தில் பலி
டூவீலரில் அதிவேகமாக சென்றவர் விபத்தில் பலி
டூவீலரில் அதிவேகமாக சென்றவர் விபத்தில் பலி
டூவீலரில் அதிவேகமாக சென்றவர் விபத்தில் பலி
ADDED : ஜூன் 08, 2025 01:01 AM
அரவக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே, இடையகோட்டை ஜக்கர நாயக்கனுார் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன், 57; இவர், கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் இருந்து பழனி செல்லும் சாலையில், 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ்' டூவீலரில் அதிவேகத்தில் சென்றார். காட்டூர் பிரிவு பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, வாகனம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில், கீழே விழுந்த அர்ஜுனனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அர்ஜுனனின் மகள் கவிதா, 35, அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.