பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
ADDED : ஜூன் 08, 2025 01:01 AM
அரவக்குறிச்சி, தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை, நேற்று இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஈத்கா மைதானத்தில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். முடிவில் ஒருவருக்கொருவர் ஈகை திருநாள் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பின், அவரவர் வசதிக்கேற்ப ஆடு, மாடு ஆகியவற்றை குர்பானி கொடுத்தனர்.
இதேபோல், பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில், 5,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்காக வெளிமாநிலங்களில் வணிகம் செய்யும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சொந்த ஊர் திரும்பினர். இதனால், அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதிகளில் பக்ரீத் பண்டிகை களை கட்டியது.