/உள்ளூர் செய்திகள்/கரூர்/திருநங்கைகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்திருநங்கைகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்
திருநங்கைகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்
திருநங்கைகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்
திருநங்கைகளுக்கு நாளை அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 20, 2024 07:13 AM
கரூர் : திருநங்கைகளின் விபரங்களை பதிவு செய்து, அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக அவர்களின் விபரங்களை பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
மேலும், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிட கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (21ம் தேதி) முகாம் நடக்கிறது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.