/உள்ளூர் செய்திகள்/கரூர்/வே.பாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகைவே.பாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை
வே.பாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை
வே.பாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை
வே.பாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை
ADDED : ஜூன் 20, 2024 07:13 AM
கரூர் : வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில், தளவாப்பாளையம் காவிரியாற்றில் விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் போதும், மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் போதும், மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட் டது.
மேலும், ஆற்றில் பொதுமக்கள் தவறி விழும் போது, அவர்களை எப்படி காப்பாற்றுவது குறித்து, தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சி ஈடுபட்டனர். புகழூர் தாசில்தார் தனசேகரன், தீயணைப்பு அலுவலர் சரவணன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.