Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/சில வரி செய்திகள்: கரூர் மாவட்டம்

சில வரி செய்திகள்: கரூர் மாவட்டம்

சில வரி செய்திகள்: கரூர் மாவட்டம்

சில வரி செய்திகள்: கரூர் மாவட்டம்

ADDED : ஜன 06, 2024 10:42 AM


Google News

சட்ட விரோத மதுபாட்டில் விற்பனை: 3 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் தோகமலை, மாயனுார் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக சிவானந்தம், 31; குமரிஆனந்தன், 44; பாலசுப்பிரமணியம், 44; ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 19 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூரில் பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம்

கரூர்: கரூரில், பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கரூர் சட்டசபை தொகுதி அமைப்பாளர் செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில், ''வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, மத்திய அரசின் திட்டங்களை வீடுகள் தோறும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். பா.ஜ.,வை மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர். நமக்கு நல்ல சூழல் இருப்பதால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

கூட்டத்தில், வடக்கு மாநகர தலைவர் வடிவேல், தொகுதி பொறுப்பாளர் அஜித்குமார், இணை அமைப்பாளர் ராஜ்குமார், பொதுச் செயலாளர் ஆறுமுகம், சக்திவேல் முருகன், செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேல்நிலைப்பள்ளியில் சாரண சாரணியர் முகாம்

கிருஷ்ணராயபுரம்: சின்னமநாய்க்கன்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குளித்தலை கல்வி மாவட்ட பாரத சாரண சாரணியர் சார்பில், அரசு ஆதிராவிடர் பள்ளிகளுக்கான சாரண பயிற்சி முகாம் நடந்தது.

மாவட்ட முதன்மை ஆணையர் மற்றும் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் காமாட்சி தலைமை வகித்தார். 96 சாரண, சாரணிய மாணவர்கள் பயிற்சி எடுத்தனர்.

அரசு ஆதிராவிடர் நல அலுவலர் சண்முக வடிவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வமணி, மணிவண்ணன், சின்னமநாய்க்கன்பட்டி அரசு ஆதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பயிற்சி ஆணையர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டூவீலர் மோதல்; வாலிபர் பலி

கரூர்: கரூர் அருகே, டூவீலர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், சந்தம்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மகன் ஞானவேல், 21. இவர் நேற்று முன்தினம் இரவு, கரூர்-கோவை சாலை மொச்சம் கொட்டம்பாளையம் பகுதியில், நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக அரவக்குறிச்சியை சேர்ந்த மணிவேல், 24, என்பவர் ஓட்டி சென்ற டூவீலர், ஞானவேல் மீது மோதியது. அதில்,அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us