/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆமை வேகத்தில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி: ஓட்டுனர்கள் அவஸ்தைஆமை வேகத்தில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி: ஓட்டுனர்கள் அவஸ்தை
ஆமை வேகத்தில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி: ஓட்டுனர்கள் அவஸ்தை
ஆமை வேகத்தில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி: ஓட்டுனர்கள் அவஸ்தை
ஆமை வேகத்தில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி: ஓட்டுனர்கள் அவஸ்தை
ADDED : ஜூன் 30, 2024 02:00 AM
கரூர், கரூர் அருகே, புதிதாக சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால், அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சி பகுதிகளில், பல முக்கிய வீதிகளில் புதிதாக சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், பல இடங்களில் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர்-வெள்ளியணை சாலை தான்தோன்றிமலை முதல், வெங்ககல்பட்டி வரை புதிதாக சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி, சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் தொடர்ந்து நடக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தான்தோன்றிமலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் வெள்ளியணை, பாளையம் மற்றும் திண்டுக்கல் பகுதிக்கு சென்று வருகிறது. அந்த சாலையில், கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிக்காக, பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல், நெரிசலில் சிக்குவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அந்த சாலையில் உள்ள, வணிக நிறுவனங்களை சேர்ந்த வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர். எனவே, கரூர்-வெள்ளியணை சாலையில் புதிதாக சாக்கடை கழிவு நீர் வாய்க்கால் கட்டும் பணியை, நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைவுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.