ADDED : ஜூன் 30, 2024 01:40 AM
நாமக்கல், போதையால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் சார்பில், மனித சங்கிலி, பேரணி என, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் பூங்கா சாலையில், போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. நாமக்கல், எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார்.
நாமக்கல் பூங்கா சாலையில் துவங்கிய பேரணி, மணிக்கூண்டு, பஸ் ஸ்டாண்ட், திருச்சி சாலை என, முக்கிய சாலை வழியாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதையால் ஏற்படும் விளைவுகள், பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். பேரணியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.