/உள்ளூர் செய்திகள்/கரூர்/சிறப்பு மக்கள் நீதிமன்ற முன் அமர்வு வரும் 24ல் நடக்கிறது: மாவட்ட நீதிபதிசிறப்பு மக்கள் நீதிமன்ற முன் அமர்வு வரும் 24ல் நடக்கிறது: மாவட்ட நீதிபதி
சிறப்பு மக்கள் நீதிமன்ற முன் அமர்வு வரும் 24ல் நடக்கிறது: மாவட்ட நீதிபதி
சிறப்பு மக்கள் நீதிமன்ற முன் அமர்வு வரும் 24ல் நடக்கிறது: மாவட்ட நீதிபதி
சிறப்பு மக்கள் நீதிமன்ற முன் அமர்வு வரும் 24ல் நடக்கிறது: மாவட்ட நீதிபதி
ADDED : ஜூன் 18, 2024 07:23 AM
கரூர் : சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கான, முன் அமர்வு வரும், 24ல் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடக்கிறது.இதுகுறித்து, கரூர் மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உச்சநீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் ஜூலை, 29 முதல், ஆக., 8 வரை உச்ச நீதிமன்றத்தில் நடை பெற உள்ளது.இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்து கொள்ளக்கூடிய, அடையாளம் காணப்பட்ட வழக்குகளின் விபரம், கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் செயல்படும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள், உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்து கொள்ள அடையாளம் காணப்பட்ட, தங்களின் வழக்குகளை சமரச முறையில் தீர்வு காணும் பொருட்டு, சிறப்பு முன் அமர்வு வரும், 24ல் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெறுகிறது.சிறப்பு நீதிமன்றத்தில், முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது.
நீதிமன்ற கட்டணமும், முழுமையாக திருப்பி பெற வாய்ப்புள்ளது. இதனால் வழக்காடிகள், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.மேலும், சிறப்பு நீதிமன்றம் குறித்து பொது மக்களுக்கு சந்தேகம் இருந்தால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினரையோ அல்லது அருகில் உள்ள குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நேரில் சந்திக்கலாம்.அல்லது, 04324-296570 என்ற தொலைபேசி மற்றும் karurdlsa@gmail.com என்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.