/உள்ளூர் செய்திகள்/கரூர்/மகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மின் விளக்குகள் அமைப்புமகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மின் விளக்குகள் அமைப்பு
மகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மின் விளக்குகள் அமைப்பு
மகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மின் விளக்குகள் அமைப்பு
மகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மின் விளக்குகள் அமைப்பு
ADDED : ஜூன் 18, 2024 07:23 AM
கரூர் : கரூர் அருகே, மகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், சோலார் வசதியுடன் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது.
அதில், சென்னை எழும்பூர்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில்கள் நின்று செல்கிறது. மேலும், மகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷனை சுற்றி, பல்வேறு கிராமப்பகு திகள் உள்ளன.அந்த கிராமப்பகுதிகளில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் மகாதானபுரம் கடைவீதி பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஆனால், மகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், போதிய மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இருளில் மூழ்கியது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, மகாதானபுரம் ரயில்வே ஸ்டேஷன் முதல், திருச்சி தேசிய நெடு ஞ்சாலையில், அரை கிலோ மீட்டர் துாரம் வரை தடுப்பு சுவர்கள் அமைத்து, மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.மின் விளக்குகள் எரியும் வகை யில், மின் கம்பங்களில் சோலார் வசதியையும், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைத்துள்ளது.