எள் சாகுபடி பணி; விவசாயிகள் தீவிரம்
எள் சாகுபடி பணி; விவசாயிகள் தீவிரம்
எள் சாகுபடி பணி; விவசாயிகள் தீவிரம்
ADDED : மார் 12, 2025 07:59 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், எள் சாகுபடி பணி நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வீரியபாளையம், லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, பாப்பகாப்பட்டி, திருமேனியூர், வடுகப்பட்டி, குளத்துார், குள்ளம்பட்டி, முத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். எள் செடிகளுக்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் வளர்ந்து, பூக்கள் பூத்து காய்கள் பிடித்து வருகிறது. இந்த பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி நடந்து வருகிறது.