/உள்ளூர் செய்திகள்/கரூர்/மணல் கடத்தியவர் கைது; டிப்பர் லாரி பறிமுதல்மணல் கடத்தியவர் கைது; டிப்பர் லாரி பறிமுதல்
மணல் கடத்தியவர் கைது; டிப்பர் லாரி பறிமுதல்
மணல் கடத்தியவர் கைது; டிப்பர் லாரி பறிமுதல்
மணல் கடத்தியவர் கைது; டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஜூன் 18, 2024 07:24 AM
குளித்தலை : குளித்தலை, லாலாபேட்டை, வதியம், நாப்பாளையம், கடம்பர்கோவில், பெரியபாலம், சாந்தி வனம், தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதுார், வீரம்பூர் பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில், இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அடியாட்களை வைத்து, லாரிகளில் மணல் கடத்துகின்றனர்.
இந்நிலையில், குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் மேற்பார்வையில் குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை, 9:00 மணியளவில் குளித்தலை காவேரி பாலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி ஒரு யூனிட் காவிரி ஆற்று மணல் கடத்தியது தெரிய வந்தது. டிப்பர் லாரி டிரைவர் முசிறி பாலாஜி அங்கிருந்து தப்பினார். கண்டியூரை சேர்ந்த சிபிசக்கரவர்த்தி, 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.