/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரோப்காரின் புதிய மின் கம்பம் மழை, காற்றால் சாய்ந்ததுரோப்காரின் புதிய மின் கம்பம் மழை, காற்றால் சாய்ந்தது
ரோப்காரின் புதிய மின் கம்பம் மழை, காற்றால் சாய்ந்தது
ரோப்காரின் புதிய மின் கம்பம் மழை, காற்றால் சாய்ந்தது
ரோப்காரின் புதிய மின் கம்பம் மழை, காற்றால் சாய்ந்தது
ADDED : ஜூன் 09, 2024 04:21 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாக இக்கோவில் இருந்து வருகிறது. கடல் மட்டத்திலிருந்து, 1,117 அடி உயரத்திலும், செங்குத்தாக, 1,017 படிகள் கொண்டது. பக்தர்கள் மலை உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரரை வணங்கி வருகின்றனர்.
மலை உச்சியில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத குழந்தைகள், முதியோர் நலன் கருதி கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் ஆகியோர், எம்.எல்.ஏ மாணிக்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கோவிலுக்கு ரோப் கார் (கம்பிவட ஊர்தி) அமைக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ரோப் கார் பணி முடியும் தருவாயில் இருந்து வருகிறது.
கடந்த, 3ம் தேதி ரோப்கார் நிறைவு பணிகளை, தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளர் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார். ரோப் காரில் பயணம் செய்யும் பக்தர்கள், பொதுமக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்வது குறித்து கேட்டறிந்தார்.
குளித்தலை எம்.எல்.ஏ.,மாணிக்கம், ஹிந்து சமய கண்காணிப்பு பொறியாளர் லால் பகதுார், திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை, மண்டல பொறியாளர் ஆனந்தராஜ், கோவில் செயல் அலுவலர்கள் அமர்நாதன், தங்கராஜூ, கோவில் பணியாளர்கள், குடிப்பாட்டுக்காரர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
அப்போது, தலைமை பொறியாளர் ரோப்கார் பணி அனைத்தும் முடிந்து, அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க, அதிகாரிகள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில்ல நேற்று முன்தினம் இரவு பெய்த மழை மற்றும் காற்றினால் ரோப் கார் அடித்தளத்தில் உள்ள தார் சாலையில், அமைக்கப்பட்டுள்ள புதிய மின் கம்பங்களில், ஒன்று சாய்ந்தது. இது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைத்து மின் கம்பங்களையும், மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, தரத்தை உறுதி செய்ய வேண்டும் என பொது மக்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.