/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மரவள்ளிக்கிழங்கு சாகுபடி: மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி மரவள்ளிக்கிழங்கு சாகுபடி: மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி: மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி: மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி: மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 09, 2024 04:21 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், தொடர் மழை காரணமாக மரவள்ளிக்கிழங்கு செடிகள் பசுமையாக வளர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம், மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், சிவாயம், பாப்பகாப்பட்டி, குழந்தைப்பட்டி, வரகூர், மலையாண்டிப்பட்டி, வேப்பங்குடி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் கிழங்கு குச்சிகள் நடவு செய்து தண்ணீர் பாய்ச்சப்பட்டது.
கிழங்கு செடிகள் வளர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. மழை நீர் செடிகளுக்கு கிடைத்து வருவதால், பசுமையாக வளர்ந்து கிழங்குகள் பிடித்து வருகிறது. மேலும் மழையால் இந்தாண்டு அறுவடை அதிகம் இருக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.