/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆண்டாங்கோவில் சாலையில் எச்சரிக்கை பலகை சேதம்ஆண்டாங்கோவில் சாலையில் எச்சரிக்கை பலகை சேதம்
ஆண்டாங்கோவில் சாலையில் எச்சரிக்கை பலகை சேதம்
ஆண்டாங்கோவில் சாலையில் எச்சரிக்கை பலகை சேதம்
ஆண்டாங்கோவில் சாலையில் எச்சரிக்கை பலகை சேதம்
ADDED : ஜூன் 07, 2024 12:04 AM
கரூர் : ஆண்டாங்கோவில் சாலையில், பள்ளி பகுதி என்ற எச்சரிக்கை பலகை சேதமடைந்துள்ளது.கரூர், கோவை சாலை ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த பகுதியில், தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பலகை சேதமடைந்த நிலையில், கம்பி பெயர்ந்து சாய்ந்து உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகை தெரியவில்லை. எனவே, சேதமடைந்துள்ள அறிவிப்பு பலகையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.