ADDED : செப் 23, 2025 01:18 AM
கரூர், கரூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவட்ட செயலர் புகழேந்தி தலைமையில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மழை சீசன் தொடங்கிய நிலையில், மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்,
மருந்து, மாத்திரைகளை தட்டுப்பாடு இல்லாமல், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், கிழக்கு மாவட்ட செயலர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் சதீஷ், ஒன்றிய செயலர் மகாமுனி, தொகுதி செயலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.