/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 23, 2025 01:16 AM
கரூர், கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் சுப்பிரமணி தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, நான்கு தொழிலாளர் சட்டதொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அமெரிக்கா வரி விதிப்பால், பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும், இங்கிலாந்தின் சிட்டா ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜா முகமது, சுடர் வளவன், ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.