/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பட்டா பெறுவதற்கான சட்ட வழி ஏற்படுத்த இனாம் நில விவசாயிகள் இயக்கம் மனு பட்டா பெறுவதற்கான சட்ட வழி ஏற்படுத்த இனாம் நில விவசாயிகள் இயக்கம் மனு
பட்டா பெறுவதற்கான சட்ட வழி ஏற்படுத்த இனாம் நில விவசாயிகள் இயக்கம் மனு
பட்டா பெறுவதற்கான சட்ட வழி ஏற்படுத்த இனாம் நில விவசாயிகள் இயக்கம் மனு
பட்டா பெறுவதற்கான சட்ட வழி ஏற்படுத்த இனாம் நில விவசாயிகள் இயக்கம் மனு
ADDED : செப் 23, 2025 01:17 AM
கரூர், இனாம் நில உரிமையை உறுதி செய்து, பட்டா பெறுவதற்கான சட்ட வழிமுறையை உருவாக்க வேண்டும் என இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு மனை உரிமையாளர் இயக்கத்தினர், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள, 13 லட்சம் ஏக்கர் இனாம் நிலங்கள் அனுபவத்தில் உள்ளன.
அதில், கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இனாம் நிலங்கள், 548 ஏக்கருக்கு கரூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு, 2,800 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இதுபோல மாவட்டத்தில், பல கோவில்களுக்கு நிலம் உள்ளன. மக்களின்
அறியாமை, அரசின் தவறு களால், இனாம் ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு நடந்தபோது, பட்டா பெற உரிமை இருந்தும் தவறி அல்லது அவர்கள் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது கோவிலுக்கு சொந்தமான இனாம் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இனாம் ஜமீன் எஸ்டேட் ஒழிப்பின்போது பட்டா பெற்று, அனுபவத்தில் உள்ள மக்களின் நில உரிமையை பத்திரப்பதிவுக்கு தடை ஏற்படுத்த, பூஜ்ஜியம் மதிப்பு செய்வதன் மூலமும் பறிப்பதை கைவிட்டு, முறையான சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு, நில உரிமையை உறுதி செய்து, பட்டா பெறுவதற்கான சட்ட வழிமுறையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.