/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அடையாளம் தெரியாத வாகனம்மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி அடையாளம் தெரியாத வாகனம்மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
அடையாளம் தெரியாத வாகனம்மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
அடையாளம் தெரியாத வாகனம்மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
அடையாளம் தெரியாத வாகனம்மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
ADDED : மார் 23, 2025 12:57 AM
அடையாளம் தெரியாத வாகனம்மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
கரூர்:தென்னிலை அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கொளத்துார் பகுதியை சேர்ந்தவர் முருகன், 40; இவர், கரூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 20 இரவு முருகன், தன்னுடன் வேலை பார்த்து வரும் பாண்டு, 40, என்பவருடன் தென்னிலை அருகே, காரப்பாளையம் பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் முருகன், பாண்டு ஆகியோர் மீது மோதியது. அதில், தலையில் படுகாயமடைந்த முருகன் உயிரிழந்தார். பாண்டு காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து, முருகனின் மனைவி சாருமதி, 29, கொடுத்த புகார்படி, தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.