/உள்ளூர் செய்திகள்/கரூர்/நடப்பு ஆண்டில் ரூ.12,766 கோடி முன்னுரிமை கடன் இலக்கு: கலெக்டர்நடப்பு ஆண்டில் ரூ.12,766 கோடி முன்னுரிமை கடன் இலக்கு: கலெக்டர்
நடப்பு ஆண்டில் ரூ.12,766 கோடி முன்னுரிமை கடன் இலக்கு: கலெக்டர்
நடப்பு ஆண்டில் ரூ.12,766 கோடி முன்னுரிமை கடன் இலக்கு: கலெக்டர்
நடப்பு ஆண்டில் ரூ.12,766 கோடி முன்னுரிமை கடன் இலக்கு: கலெக்டர்
ADDED : செப் 02, 2025 12:53 AM
கரூர்:''நடப்பு ஆண்டில், 12,766 கோடி ரூபாய் முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து முன்னுரிமை கடன் அறிக்கையை வெளியிட்டார்.
பின், அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்திற்கு, 2025--26ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் கூட்டுறவு மற்றும் ஊரக வங்கிகள் வழியாக வேளாண் கடனாக, 7,532.06 கோடி ரூபாய், சிறுகுறு மற்றும் நடுத்தர வர்க்க தொழில் மற்றும் ஏற்றுமதி கடனாக, 4,543.86 கோடி ரூபாய், இதர முன்னுரிமை கடனாக, 761.57 கோடி ரூபாய் என மொத்தம், 12,766.62 கோடி ரூபாய் முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இலக்கை விட, 718.89 கோடி ரூபாய் அதிகமாகும். வேளாண் துறைக்கு மட்டும், 59 சதவீதம் தொகை கடனாக ஒதுக்கப்பட்டு உள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு, 35 சதவீதமும், இதர முன்னுரிமை கடனுக்கு, 6 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில், ஐ.ஓ.பி. முதன்மை மண்டல மேலாளர் திருமுருகன், இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் ஸ்ரீதர், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரபாகரன், முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் தனசேகரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.