Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தகு​தி ​தேர்​வில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு

தகு​தி ​தேர்​வில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு

தகு​தி ​தேர்​வில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு

தகு​தி ​தேர்​வில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு

ADDED : செப் 23, 2025 01:20 AM


Google News
கரூர், ஆசிரியர் தகு​தி​ தேர்​வில் உச்​சநீ​தி​மன்​றம் வழங்​கி​யுள்ள தீர்ப்பை, மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கோரி, கரூர் கலெக்டர்

தங்கவேல் மூலம், பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் மணிகண்டன் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதில், கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில், 1.75 லட்சம் பேருக்கு மேலானவர்கள், டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இதில், 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதை, உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கி உள்ளது. டெட் வழக்​கில் உச்​ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பி​னால் நாடு முழு​வதும், 25 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் பாதிக்கப்​படும் சூழல் உள்​ளது.கட்​டாய கல்வி உரிமை சட்​டம் அமல்​படுத்​தப்​படு​வதற்கு, முன்பு நியமிக்​கப்​பட்ட ஆசிரியர்​களுக்கு தகு​தி தேர்வு கட்​டா​யம் என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்.​சிடி.இ.,) குறிப்​பிட​வில்லை.

ஆசிரியர் தகு​தி ​தேர்​வில், உச்ச நீ​தி​மன்​றம் வழங்​கி​யுள்ள தீர்ப்பு குறித்​தும், கட்​டாய கல்வி உரிமை சட்​டத்​தின் பிரிவு 23-ஐ திருத்​து​வது குறித்​தும், மறுஆய்வு மனு தாக்​கல் செய்ய பிரதமர் மற்​றும் மத்திய கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us