/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மகிளிப்பட்டி சாலையில் குடிநீர் குழாயில் விரிசல் மகிளிப்பட்டி சாலையில் குடிநீர் குழாயில் விரிசல்
மகிளிப்பட்டி சாலையில் குடிநீர் குழாயில் விரிசல்
மகிளிப்பட்டி சாலையில் குடிநீர் குழாயில் விரிசல்
மகிளிப்பட்டி சாலையில் குடிநீர் குழாயில் விரிசல்
ADDED : செப் 23, 2025 01:20 AM
கிருஷ்ணராயபுரம் :மகிளிப்பட்டியில், குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையோர குட்டைக்கு செல்கிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்து மகிளிப்பட்டி கிராமத்துக்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது.
இதனால், காவிரி குடிநீர் மக்களுக்கு கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீணாகும் தண்ணீர், அருகில் உள்ள குட்டையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, குடிநீர் குழாய் விரிசலை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.