/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ஒன்றிய நடுநிலை பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூன் 13, 2025 01:41 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை, தலைமையாசிரியர் சாகுல் அமீது தலைமையில் அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் எடுத்தனர்.
இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, ஒருபோதும் எந்த பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு இயன்றவரை பாடுபடுவேன் என உளமார உறுதி கூறுகிறேன் என்று
மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
தமிழக அரசு வழங்கும் விலையில்லா பல நலத்திட்டங்களையும், நன்மைகளும் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. எனவே அனைவரும் தவறாது பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.