/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வாங்கல் வாய்க்காலை துார்வார வலியுறுத்தல் வாங்கல் வாய்க்காலை துார்வார வலியுறுத்தல்
வாங்கல் வாய்க்காலை துார்வார வலியுறுத்தல்
வாங்கல் வாய்க்காலை துார்வார வலியுறுத்தல்
வாங்கல் வாய்க்காலை துார்வார வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2025 01:41 AM
கரூர், கரூர் அருகே, வாங்கல் வாய்க்காலை துார் வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளில் இருந்து பாசன வாய்க்கால்கள் மூலம், பல ஏக்கர் சாகுபடி நடந்து வருகிறது. வாங்கல் பகுதி வாய்க்கால் சரிவர பராமரிக்கப்படாததால், அதிகளவு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்தும், பிளஸ்டிக் கழிவுகளாலும் மூடி கிடக்கிறது. இதுபோன்ற செடிகள் தண்ணீரின் போக்கை மாற்றும் தன்மை உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து நேற்று முதல், காவிரி பாசன தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சில நாட்களில் வாய்க்காலில் தண்ணீர் வரும் என்பதால், நீர்வளத்துறையினர் வாங்கல் பகுதி வழியாக செல்லும், பாசன வாய்க்காலில் போர்க்கால அடிப்படையில் துார் வாரி, அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.