/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கழிவுநீர் வாய்க்காலில் செடிகள் அகற்ற மக்கள் வேண்டுகோள் கழிவுநீர் வாய்க்காலில் செடிகள் அகற்ற மக்கள் வேண்டுகோள்
கழிவுநீர் வாய்க்காலில் செடிகள் அகற்ற மக்கள் வேண்டுகோள்
கழிவுநீர் வாய்க்காலில் செடிகள் அகற்ற மக்கள் வேண்டுகோள்
கழிவுநீர் வாய்க்காலில் செடிகள் அகற்ற மக்கள் வேண்டுகோள்
ADDED : செப் 21, 2025 01:14 AM
கரூர், கரூரில், கழிவுநீர் வாய்க்காலில் முளைத்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் ரத்தினம் சாலையில், கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. அந்த பகுதியில் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்நிலையில், கழிவுநீர் வாய்க்கால் தெரியாத அளவில், செடிகள் அதிகளவில் முளைத்துள்ளது. மழை பெய்யும்போது, மழை நீருடன் கழிவுநீர் செல்லாமல், சாலையில் ஓடும் அபாயம் உள்ளது.
சில மாதங்களுக்கு முன், ரத்தினம் சாலையில் மழை பெய்த போது, வாய்க்காலில் இருந்து கழிவுநீர், மழைநீருடன் வெளியேறி குடியிருப்பு பகுதியில் சாலையில் ஓடியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். விரைவில் வரவுள்ள வடகிழக்கு பருவ மழையின் போது, அதிகளவில் மழை பெய்தால் வாய்க்காலில் இருந்து, கழிவுநீர், மழைநீர் குடியிருப்பு பகுதியிலும், சாலையில் ஓட வாய்ப்பு உள்ளது. எனவே, ரத்தினம் சாலை பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் உள்ள செடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.