/உள்ளூர் செய்திகள்/கரூர்/மக்கள் சாலை மறியல்; போலீசார் வழக்குப்பதிவுமக்கள் சாலை மறியல்; போலீசார் வழக்குப்பதிவு
மக்கள் சாலை மறியல்; போலீசார் வழக்குப்பதிவு
மக்கள் சாலை மறியல்; போலீசார் வழக்குப்பதிவு
மக்கள் சாலை மறியல்; போலீசார் வழக்குப்பதிவு
ADDED : ஜன 06, 2024 10:39 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, காணியாளம்பட்டி காலனியை சேர்ந்தவர் நாகராஜன், 34. இவர் வளர்த்து வந்த ஆறு ஆடுகளை சுற்றித்திரிந்த வெறிநாய்கள் கடித்து கொன்றுள்ளன.இதனால் பாதிக்கப்பட்ட நாகராஜன், தாமரைச்செல்வி மற்றும் ஏழு பேர் நேற்று முன்தினம் மதியம், தரகம்பட்டி உப்பிடமங்கலம் நெடுஞ்சாலை கணியாளம்பட்டி பஸ் ஸ்டாப்பில், பலியான ஆடுகளை சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல், தொடர்ந்து விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று வருகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்தவும், நாய்களை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தனர். பஞ்., மற்றும் யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக, எட்டு பேர் மீது மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.