/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாலையோரம் வளர்ந்துள்ள முள் செடியால் மக்கள் அவதி சாலையோரம் வளர்ந்துள்ள முள் செடியால் மக்கள் அவதி
சாலையோரம் வளர்ந்துள்ள முள் செடியால் மக்கள் அவதி
சாலையோரம் வளர்ந்துள்ள முள் செடியால் மக்கள் அவதி
சாலையோரம் வளர்ந்துள்ள முள் செடியால் மக்கள் அவதி
ADDED : மே 26, 2025 04:10 AM
கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி சாலையோரம் அதிகளவில் வளர்ந்துள்ள முள் செடிகளால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, வேங்காம்-பட்டி நுாலக சாலை முதல், பாலப்பட்டி பிரிவு சாலை வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அப்பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பெய்த மழையால், முள் செடிகள் நன்கு வளர்ந்து சாலையோரம் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும், சாலையில் நீட்டிக்கொண்டுள்ள முள் செடிகளால், வாக-னங்களில் செல்லும்போது முள் செடிகள் பட்டு காயமடைகின்-றனர். எனவே, சாலையோரம் இருபுறமும் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பஞ்., நிர்வாகத்துக்கு, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.