/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரூ.5.62 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பூமி பூஜை ரூ.5.62 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பூமி பூஜை
ரூ.5.62 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பூமி பூஜை
ரூ.5.62 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பூமி பூஜை
ரூ.5.62 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பூமி பூஜை
ADDED : ஜூன் 16, 2025 07:38 AM
கரூர்: கரூர் மாநகராட்சி பகுதிகளில், புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூர் மாநகராட்சி, 22வது வார்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ரத்தினம் சாலையில் தார்ச்சாலை பணி; 23வது வார்டில், கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைத்தல். சமையலறை, சைக்கிள் செட் கட்டுதல், வடக்கு மட விளாகத்தில், 28.22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி; 32வது வார்டில், கோட்டைமேடு மாநகராட்சி பள்ளியில், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி நடக்கிறது.
திருவள்ளுவர் மைதானத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, 33வது வார்டில், திரு.வி.க., சாலையில், 18.07 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி, 3வது வார்டு கலைஞர் சாலை பகுதியில், 35.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை பணி, 4வது வார்டு ஜீவா நகர், 2வது கிராஸ் பகுதியில், 45.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தார்ச்சாலை பணி என மொத்தம், 5.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 65 புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசு, ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.